ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு இன்று மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையால் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது.
பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தப் பதக்கம் கிடைத்தது. ஈஷா சிங் 38 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வடகொரியா தங்கப் பதக்கம் பெற்றது.
இந்தியா இதுவரை 4 தங்கம், 17 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங்களைப் பெற்றுள்ளது.