இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டாங், இடது கால் பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்து வரும் ஜோஷ் டாங், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமானார்.
சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஒருநாள் முத்தரப்புத் தொடரில் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடி, 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், அடுத்ததாக நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்த ஜோஷ் டாங் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஜோஷ் டாங் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மட்டுமே இடம்பெற்றிருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நவம்பர் 13-ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. அடுத்த போட்டிகள் நவம்பர் 15-ஆம் தேதி அடிலெய்டிலும், நவம்பர் 18-ஆம் தேதி ஹோபார்ட்டிலும் நடைபெறுகின்றன.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தென் ஆாப்பிரிக்காவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கு முன்பாக டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 2 நாள் பயிற்சிப் போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.
இந்நிலையில், ஜோஷ் டாங் விலகியுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்குள் குணமடைந்து அணிக்குத் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.