விளையாட்டு

ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்றார் இளவேனில்

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

தனிநபர் இறுதிப்போட்டியில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் 252.4 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கான 2வது பதக்கம் ஆகும்.

ஒரே நாளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் ஆகும். சீன வீராங்கனை முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஏற்கனவே, இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் பிரிவில் இந்தியாவின் சோனம் மாஸ்கர் 6வது இடம் பிடித்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT