விளையாட்டு

ஆசிய விளையாட்டு: வட்டு எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற இந்தியா

இலங்கையின் ருமேஷ் பதிரகே 88.55 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் வட்டு எறிதலில் இந்தியாவின் யஷ்வீர் சிங் வெள்ளிப் பதக்கமும், ரோகித் யாதவ் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற வட்டு எறிதலில் இந்தியாவின் யஷ்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆண்கள் பிரிவில் அவர் 85.72 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இலங்கையின் ருமேஷ் பதிரகே 88.55 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் 84.35 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.

இதேபோல், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.07 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சீனா தங்கப் பதக்கத்தையும், உஸ்பெகிஸ்தான் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

இந்தியா இதுவரை 4 தங்கம், 20 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT