யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தைவானின் டங் சியோ-டாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தேவிகா சிஹாக் 21-17, 21-19 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் டோன்ரக் செஹங்கை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ் 21-4, 21-19 என்ற செட் கணக்கில் தைவானின் சென் சூ யூவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.