விளையாட்டு

இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து ஏமாற்றம்.. பிரெஞ்சு ஓபன் பட்டத்தை தட்டிச் சென்ற கொரிய வீராங்கனை

11வது முறையாக தென்கொரிய வீராங்கனையிடம் சிந்து வீழ்ந்தார்.

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் தென்கொரிய வீராங்கனையிடம் சிந்து வீழ்ந்தார்.

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது.

இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், தென்கொரிய நாட்டை சேர்ந்தவருமான அன் சே யங் உடன் இந்தியாவின் பி.வி.சிந்து மோதினார்.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் பி.வி.சிந்து கைப்பற்றினார்.

ஆனால் அடுத்தடுத்த செட்களில் ஆட்டத்தின் போக்கோ தலைகீழாக மாறியது. அடுத்த 2 செட்களையும் 11-21, 12-21 என்ற கணக்கில் தென்கொரிய வீராங்கனை அன் சே யங் கைப்பற்றினார்.

பி.வி. சிந்து தொடர் தோல்வி

இதன்மூலம் இவ்வாண்டின் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் சாம்பியனாக அன் சே யங் உருவெடுத்தார்.

இதன்மூலம், 11வது முறையாக தென்கொரிய வீராங்கனையிடம் சிந்து வீழ்ந்தார்.

அன் சே யங்-பி.வி.சிந்து இந்தாண்டில் மட்டும் 2 முறை மோதியுள்ளனர்.

சிங்கப்பூர் ஓபனின் காலிறுதியிலும், இந்தோனேசியா ஓபனின் 2வது சுற்றிலும் அன் ஷே யங்கே ஆதிக்கம் செலுத்தியுள்ளார். தற்போது, பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டனையும் கைப்பற்றியுள்ளார்.

முன்னதாக இந்த பிரெஞ்ச் ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ஜப்பானின் ஹீனா அகேச்சியை வீழ்த்தி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT