விளையாட்டு

உலக கோப்பை குத்துச்சண்டை: 2 வீரர்களை தவிர மற்றவர்கள் ஏமாற்றம்

உலக கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) சீனாவின் குய்யாங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த தீபக் மற்றும் பூனம் ஆகியோரை தவிர்த்த மற்ற வீரர்கள் தோல்வியடைந்தனர்.

பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவில் பூனம் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அஜிஜா யோகுபோவாவை எதிர்கொண்டார். இதில் பூனம் 5-0 என வெற்றி பெற்றார்.

ஆண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவிலா் தீபக் துர்க்மெனிஸ்தானைச் சேர்நத் பேராம்துர்தி நுர்முகம்மேதோவை 5-0 என வீழ்த்தினார்.

அன்மோால் 60 கிலோ எடைபிரிவிலும், ஹர்ஷ் சவுத்ரி 90 கிலோ எடைப்பிரிவிலும், பெண்கள் 80 கிலோ எடைப்பிரிவிலா் நைனாவும், 75 கிலோ எடைப்பிரிவில் சனமசா சானு தொக்மோம், 90 கிலோவுக்கு அதிகமான எடைப்பிரிவில் அல்பியா தருனும் அக்ரம் கான் பதான் தோல்வியை சந்தித்தனர்.