விளையாட்டு

புரோ கபடி லீக்: யு மும்பாவை வீழ்த்தியது தபாங் டெல்லி

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. யு மும்பா அணியை தபாங் டெல்லி அணி வீழ்த்தியது.

மாலை மலர்

ஜெய்ப்பூர்:

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி, யு மும்பா அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே தபாங் டெல்லி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

இறுதியில், சிறப்பாக ஆடிய தபாங் டெல்லி அணி 47-26 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.