பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்ட் தாரூபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் அசான் அவைஸ் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து இமாம் உல் ஹக் உடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷான் மசூத் 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். இமாம் உல் ஹக் 81 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
பாகிஸ்தானின் ஸ்கோர் 156 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. இமாம் உல் ஹக் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் குவித்தது. அடுத்து பாபர் அசாம் களம் இறங்கினார். இவர் 23 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.
3-வது விக்கெட்டுக்கு சல்மான் ஆகா களம் இறங்கினார். பாகிஸ்தான் 48 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
ஷான் மசூத் 88 ரன்களுடனும், சல்மான் ஆகா ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கேமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ஷமர் ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தற்போது பாகிஸ்தான் 112 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் வீரர்கள் நிலைத்து நின்று அதிக ரன்கள் குவித்தால், இந்த டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.