முசாரபானி
கிரிக்கெட்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 217 ஆல்-அவுட்

அஃப்சர் சஜாய் அரைசதம் கடந்த 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜிம்பாப்வே பிரெண்டன் டெய்லர் (119), இன்னெசன்ட் கையா (96) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 339 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியின் அறிமுக வீரர் நசீர் கான் மரூஃப்கில் 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.

2-வது நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 159/6

பின்னர் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. அஃப்சர் சஜாய் 33 ரன்களுடனும், நசீர் கான் மரூஃப்கில் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அஃப்சர் சஜாய் 63 ரன்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அஃப்சர் சஜாய் அரைசதம் கடந்த 63 ரன்களில் ஆட்டமிழந்தார். மரூஃப்கில் 20 ரன்களில் வெளியேறினார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் முதல ்இன்னிங்சில் 217 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 122 ரன்கள் முன்னிலை

ஜிம்பாப்வே அணி தரப்பில் வின்செனட் மசேகெசா 4 விக்கெட்டும், முசாரபானி 3 விக்கெட்டும், கிரேம் கிரிமர் 2 விக்கெட்ம் வீழ்த்தினர். பின்னர் 122 ரன்கள் முன்னிலையுடன் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில் இந்த டெஸ்டில் ஜிம்பாப்வே வெற்றி பெற முயற்சிக்கும்.

SCROLL FOR NEXT