வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.
பந்துவீச்சு தேர்வு:
அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி விக்கெட்டுகளை விரைவில் இழந்து திணறியது. அந்த அணி 66 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. 5-ஆவது விக்கெட்டுக்கு பென் கர்ரன், சிக்கந்தர் ராசா ஜோடி 68 ரன்கள் சேர்த்தது. சிக்கந்தர் ராசா 33 ரன்னில் அவுட் ஆனார். பொறுப்புடன் ஆடிய பென் கர்ரன் சதமடித்து அசத்தினார்.
வங்கதேசம் இலக்கு:
7-ஆவது விக்கெட்டுக்கு பென் கர்ரன், பிராட் இவான்ஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக, பிராட் இவான்ஸ் 38 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 58 ரன்கள் குவித்தார். இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. பென் கர்ரன் 111 ரன்னும், பிராட் இவான்ஸ் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. வழங்கதேசம் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் அரைசதம் (57 ரன்கள்) குவித்தார். இவருடன் களமிறங்கிய சௌமியா சர்கார் 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
ஜிம்பாப்வே வெற்றி:
தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் ஷன்டோ 9 ரன்களுக்கு நடையை கட்டினார். பிறகு களமிறங்கிய தௌஹித் ரிடோய் மற்றும் நுருல் ஹசன் பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர்.
நுருல் ஹசன் 38 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுக்க தௌஹித் நிதானமாக ஆடி 60 ரன்களை குவித்தார். இவர்களை தொடர்ந்து ஆடியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 48.1 ஓவர்களில் வங்கதேசம் அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஜிம்பாப்வே அணி 13 ரன்களில் வெற்றி பெற்றது.