இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் அய்யரும், ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசாவும் செயல்படுகின்றனர்.
இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற்றார். அஷோக் சர்மா அறிமுக வீரராக களமிறங்கினார்.
அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. முதல் பந்தில் பிரியன் பென்னட்டை அவுட்டாக்கி அதிர்ச்சி அளித்தார் மயங்க் யாதவ்.
பென் கர்ரன், டியான் மியர்ஸ், சிக்கந்தர் ராசா ஆகியோரும் விரைவில் வெளியேறினர்.
5வது விக்கெட்டுக்கு ரியான் பர்ல், வெஸ்லி மாதேவீர் இணைந்து 32 ரன்கள் சேர்த்த நிலையில், ரியான் பர்ல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் வெஸ்லி மாதேவீர், மருமானி ஜோடி அதிரடியாக ஆடி 57 ரன்கள் சேர்த்ததால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.
மாதேவீர் 34 பந்தில் 39 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
இந்தியா சார்பில் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அறிமுக வீரராக களமிறங்கிய அஷோக் சர்மா 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.