ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 140 ரன்களில் சுருண்டது. மொமினுல் ஹக் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். ஷட்மன் இஸ்லாம் 20 ரன்னும், கேப்டன் ஷான்டே 19 ரன்னும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே அணி சார்பில் நியூமேன் நியாம்ஹுரி 4 விக்கெட்டும், நகரவா, முசாராபானி, பிராட் ஈவான்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 410 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தொடக்க வீரர் இன்னசென்ட் காலா அபாரமாக விளையாடி சதம் விளாசிய அவர் 140 ரன்னில் ஆட்டமிழந்தார். கிரேக் எர்வின் 60 ரன்னும், பிரையன் பென்னெட் 59 ரன்னும் எடுத்தனர். வெஸ்லி மாதேவெரே 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வங்கதேச வீரர் தைஜுல் இஸ்லாம் 7 விக்கெட்டும், காலித அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், வங்கதேசம் 2வது இன்னிங்சில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.
முஷ்பிகுர் ரஹீம் 34 ரன்னும், நஜ்முல் ஹொசைன் ஹாண்டோ 30 ரன்னும், அமைத் ஹாசப் 25 ரன்னும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், நகரவா 3 விக்கெட்டும், நியூமேன் நியாம்ஹுரி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இன்னசென்ட் காலா ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.