கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே 250/5

2-வது விக்கெட்டுக்கு இன்னசென்ட் காலா-பிரெண்டன் டெய்லர் ஜோடி 102 ரன்கள் சேர்த்தது.

ஷார்ஜாவில் நடந்து வரும் 2வது டெஸ்டில் இன்னசென்ட் காலா, பிரெண்டன் டெய்லரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 250 ரன்கள் எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இன்னசண்ட் காலா, பென் கரன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

இன்னசென்ட் காலா அரை சதம்

முதல் விக்கெட்டுக்கு 98 ரன்களை சேர்த்த நிலையில், பென் கரன் 44 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இன்னசென்ட் காலாவுடன் பிரெண்டன் டெய்லர் இணைந்தார். இந்த ஜோடியும் பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னசென்ட் காலா 96 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 102 ரன்கள் சேர்த்தது.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பிரெண்டன் டெய்லர் அபாரம்

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பிரெண்டன் டெய்லர் பொறுப்புடன் ஆடினார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 82 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. பிரெண்ட்ன் டெய்லர் 96 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ஆப்கானிஸ்தான் சார்பில் நசீர் கான் மரூப்கி 4 விக்கெட் வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT