இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 26 வயதான பஞ்சாப் வீரர் குர்னூர் பிரார் இடம் பிடித்திருந்தார். இவர் 6 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர். இலங்கை லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி 2 இன்னிங்சிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளதால், இவருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் குர்னூர் பிரார், இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடும் திறன் உள்ளதாக ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிவேகத்தில் (140 கி.மீ.) பந்து வீசும் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நல்ல மற்றும் நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் திறன் குர்னூர் பிராரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். அவருக்கு விரைவான முன்னேற்றம் கிடைத்தது நல்லது. நான் அவருடன் சிறிது காலம் செலவிட்டபோதே, அவரின் அபாரமான திறனை என்னால் காண முடிந்தது. இறுதியில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ஆனால் திறனைப் பொறுத்தவரை, அவர்தான் என்னை மிகவும் கவர்ந்துள்ளார்.
இவ்வாறு ஜாகீர் கான் தெரிவித்தார்.
2019-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியன் நெட் பவுரலாக செயல்பாட்டார். 2023-ல் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2025-ல் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 1.3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.