கிரிக்கெட்

உலக கோப்பை நாயகன் யுவராஜ் சிங்கின் பயோபிக்- விரைவில் படப்பிடிப்பு

இந்த படத்துக்கு தற்காலிக தலைப்பாக சிக்ஸ் சிக்ஸர்கள் என இருக்கும் என்று கூறப்படுகிறது.யுவராஜ் கதாபாத்திரத்திற்கு ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. பூஷன் குமார் தயாரிக்கும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் ரவி சமீபத்தில் யுவராஜை சந்தித்தனர். அதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

புற்றுநோய் போன்ற கடுமையான நோயை எதிர்த்துப் போராடி தன்னை மீண்டும் களத்திற்குக் கொண்டு வந்த இந்த வீரரின் கதை நிச்சயம் பலருக்கும் ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும்.

சிக்ஸ் சிக்ஸர்ஸ் என்ற பெயரில் உருவாக உள்ளது. படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும். யுவராஜ் கதாபாத்திரத்திற்கு ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருப்பினும், யுவராஜ் ஒரு நேர்காணலில், தனது வாழ்க்கை வரலாறு படமாக இருந்தால், சித்தாந்த் சதுர்வேதி தனது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

யுவராஜின் பலத்தால், இந்தியா 2011-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

SCROLL FOR NEXT