கிரிக்கெட்

ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக இந்திய அணியில் இணைந்த யாஷ் தாகூர்

ஏற்கனவே, ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திலும் யாஷ் தாகூர் சேர்க்கப்பட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தான் உடனான டி20 தொடர் மற்றும் 2026 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து காயத்தால் விலகிய ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக யாஷ் தாகூர் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

இந்திய அணி ஆப்கானிஸ்தான் உடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டியிலும் பங்கேற்க உள்ளது.

ஹர்ஷித் ராணா விலகல்

இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக விதர்பா வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாகூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாஷ் தாகூர் விதர்பாவைச் சேர்ந்த வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஏற்கனவே, ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திலும் யாஷ் தாகூர் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது அவர் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி, இரு போட்டிகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கவனம் ஈர்த்தார்

எனவே, ராணாவுக்கு பதிலாக தாகூரைத் தேர்வு செய்துள்ளது அவர்மீது தேர்வுக்குழு வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

இந்திய அணி விவரம்:

ஷ்ரேயஸ் அய்யர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா (துணை கேப்டன்), ஷிவம் துபே, நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யாஷ் தாகூர்.

SCROLL FOR NEXT