கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 9 முறை நடந்துள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கடைசியாக 2024-ஆம் ஆண்டு நடந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடக்கம்:

10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஜூன் 12) தொடங்கியது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது.

மொத்தம் 12 அணிகள் 2 பிரிவுகளாக விளையாட உள்ளன. இன்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பந்துவீச முடிவு செய்தது.