பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதன் மூலம் 3 டெஸ்ட் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.
பாகிஸ்தானை 2-வது டெஸ்டில் வீழ்த்தியன் மூலம் இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னே றியது. அந்த அணி 34.44 சதவீத புள்ளிகள பெற்றுள்ளது. இலங்கை அணி 7-வது இடத்துக்கு (33.33 புள்ளிகள்) பின் தங்கியது.
பாகிஸ்தான் அணி கடைசி இடமான 9-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 16.67 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது. 19.05 புள்ளியில் இருந்து அந்த அணி பின் தங்கியது.
இங்கிலாந்து அணிக்கு இன்னும் 4 டெஸ்டுகள் உள்ளது. இதில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளை நம்பிதான் அந்த அணி நிலை இருக்கிறது.
ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் (80.00 புள்ளிகள்) தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும் (75.00), நியூசிலாந்து 3-வது இடத்திலும் (72,22) வங்காள தேசம் 4-வது இடத்திலும் (55.56), இந்தியா 5-வது இடத்திலும் (51.52) உள்ளன. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்திய அணிக்கு இன்னும் 7 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.