கிரிக்கெட்

WCL | உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் லீக்கில் வங்கதேசம் சாம்பியன்ஸ் அணி சேர்ப்பு..!

ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் உலக சாம்பயின்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் லீக் தொடரில் வங்கதேசம் சாம்பியன்ஸ் அணி சேர்க்கப்பட்டுள்ளது

மாலை மலர்

உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் லீக் பிரபலம் அடைந்து வருகிறது. அதனடிப்படையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் நட்சத்திர வீரர்களை கொண்டு ஒரு லீக் அமைக்கப்பட்டது. இந்த லீக்கிற்கு உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

WCL-யின் இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளன. இரண்டு சீசன்களும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. முதல் சீசனை உலகம் முழுவதும் 32.5 கோடி ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். 2-வது சீசனை 42.31 கோடி ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.

3-வது சீசனில் வங்கதேச சாம்பியன்ஸ அணியை இணைக்க, லீக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த சீசனில் இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ், தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் பங்கேற்றன. இந்த வருடம் வங்கதேசம் சாம்பியன்ஸ் அணி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

2024 சீசனில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையை வென்றது. கடந்த வருடம் தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி டிராபிபை கைப்பற்றியது.

யுவராஜ் சிங், ஏபி டி வில்லியர்ஸ், பிரெட் லீ, மொயீன் அலி, முகமது ஹபீஸ், கிறிஸ் கெய்ல் போன்ற வீரர்கள் விளையாடுகின்றனர்.