கிரிக்கெட்

ரிக்கி பாண்டிங், டோனி சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய பெண்கள் அணி கேப்டன்

6-வது முறையாக உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.மெக்லானிங் தலைமையில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி, 2022-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2014, 2018, 2020, 2023-ம் ஆண்டுகளில் நடந்த 20 ஓவர் உலக கோப்பைகள் என 5 கோப்பைகளை வென்று உள்ளது.

பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6-வது முறையாக உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

உலக கோப்பையை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய பெண்கள் அணி கேப்டன் மெக்லானிங் புதிய சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் அதிக கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மெக்லானிங் தலைமையில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி, 2022-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2014, 2018, 2020, 2023-ம் ஆண்டுகளில் நடந்த 20 ஓவர் உலக கோப்பைகள் என 5 கோப்பைகளை வென்று உள்ளது.

இதன் மூலம் அவர், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (4 முறை), இந்தியாவின் டோனி (3 முறை) ஆகியோரை முந்தினார்.