கிரிக்கெட்

டி20 மகளிர் உலக கோப்பை: தீப்தி ஷர்மா அதிரடி... பாக்.ஐ புரட்டிப்போட்ட இந்திய அணி அபார வெற்றி

இந்திய மகளிர் அணி சார்பில் தீப்தி ஷர்மா அபாரமாக பந்துவீசினார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் க்ரூப் 1-இல் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. பர்மிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணிக்கு ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். ஷபாலி வர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3-ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார்.

இந்தியா இலக்கு:

இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஸ்மிரிதி மந்தனா 44 பந்தில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்மன்ப்ரீதி கவுர் 36 ரன்களில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 17 பந்தில் 34 ரன்கள் விளாச இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

பாகிஸ்தான் அணிக்கு துவக்க பேட்டர்களாக களமிறங்கிய முனீபா அலி மற்றும் குல் பெரோஸா நல்ல துவக்கம் கொடுத்தனர். பெரஸா 122 ரன்களில் ஆட்டமிழக்க முனீபா அலி 35 பந்துகளை எதிர்கொண்டு 41 ரன்களை குவித்தார். அடுத்து வந்தவர்களில் ஆயிஷா சஃபர் 12 ரன்களும் ஆலியா ரியாஸ் 18 ரன்களும் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா வெற்றி:

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 17 ஒவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க இந்திய மகளிர் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சராணி 3 விக்கெட்டுகளையும், ஷபாலி வர்மா 1 விக்கெட் கைப்பற்றினர்.