பெண்கள் ஆசிய கோப்பை: 
கிரிக்கெட்

பெண்கள் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

10வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை

10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

அரையிறுதி

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள 7 முறை சாம்பியனான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தையும், 2வது ஆட்டத்தில் ஹாங்காங்கையும் வீழ்த்தி அரையிறுதியை எட்டியது.

இந்தியா பாகிஸ்தான்

இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் இன்று மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களான முனீபா அலி மற்றும் ஷவால் சுல்பிகார் முதல் நான்கு ஓவர்களில் 23 ரன்கள் எடுத்தனர்.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் நான்கு ஓவர்களை வீசியும் விக்கெட் எதுவும் எடுக்கத் தவறினர்.

ஐந்தாவது ஓவரில், ஷெபாலி வர்மா முனீபா அலியை ஆட்டமிழக்கச் செய்தார். அதற்கடுத்த ஓவரிலேயே, ஸ்ரீ சரணி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஸ்ரீ சரணி மொத்தம் 3 விக்கெட்டுகளையும் தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளையும், ஷெபாலி வர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 18.1 ஓவர்களில் 55 ரன்களுக்கு சுருண்டது. டி20 போட்டிகளில் பாகிஸ்தான் மகளிர் அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

ஸ்ரீ சரணி சாதனை

ஸ்ரீ சரணியும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை (34) எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பூனம் யாதவ் 35 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்தியா பேட்டிங்

56 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷெபாலி வர்மா, முதல் பந்திலேயே ஒரு சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து, அவர் டி20 சர்வதேசப் போட்டிகளில் 3000 ரன்களை நிறைவு செய்தார்.

இந்த ஆட்டத்தில் இரண்டாவது ஓவரில், பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, ஷெபாலி (12) மற்றும் பிரதிகா ராவல் (4) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்மிருதி மந்தனாவை (9) எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

ஆனால் பின்னர் களமிறங்கிய பின்னர் ஹர்மன்பிரீத் மற்றும் தீப்தி ஷர்மா இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்திய அணி 56 ரன்கள் என்ற இலக்கை 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு விரட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT