கிரிக்கெட்

மகளிர் உலக கோப்பை யாருக்கு? மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்

அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.

கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த மகளிர் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக திடீரென மழை பெய்தது. இதனால் சரியான நேரத்தில் டாஸ் சுண்டப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் 3 மணிக்கு டாஸ் சுண்டப்படும். 3.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் 3 மணிக்கு டாஸ் சுண்டப்படவில்லை. இதனால் போட்டி தொடங்க இன்னும் காலதாமதம் ஆகும் .

SCROLL FOR NEXT