கிரிக்கெட்

டி20 மகளிர் உலக கோப்பை: நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம்

வங்கதேச தொடக்க பேட்டர் 50 ரன்கள் அடிக்க வங்கதேசம் 5 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றுள்ளது.

டி20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் நடைபெற்ற போட்டியில் குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள நெதர்லாந்து- வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் பபேட் டி லீட் அதிகபட்சமாக 50 ரன்கள் அடித்தார்.

பின்னர் 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் 2-வது பேட்டிங் செய்தது. தொடக்க பேட்டர் ஜுயைரியா பெர்டவுஸ்எ 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

ஷர்மின் அக்தர் ஆட்டமிழக்கால் 32 பந்தில் 37 ரன்கள் அடிக்க 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.