ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. ஜூன் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 5ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை ஜூன் 14-ம் தேதி சந்திக்கிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
இந்திய அணியின் விவரம்:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, நந்தனி ஷர்மா, அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்குர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யஸ்திகா பாடியா, ஷ்ரயங்கா பாட்டீல், பாரதி புல்மாலி.