கிரிக்கெட்

2வது டி20 போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு - இந்தியா பேட்டிங்

முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்று கைப்பற்றியது. அடுத்து நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது டி20 போட்டி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி ஜார்க்கண்டின் ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு தொடங்கிய் இந்தப் போட்டியில் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

இந்நிலையில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

இந்திய அணி விவரம்

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர், திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், நமன் தீர், மயங்க் யாதவ்.

SCROLL FOR NEXT