கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்

நான்காவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

அடுத்து நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் ஷாய் ஹோப் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றிது. 4-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என சமனிலை வகிக்கிறது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு தொடங்க வேண்டிய இந்தப் போட்டி மழை காரணமாக தாமதமாக 9 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது. இந்திய அணி சார்பில் ஷிவம் துபே, புவனேஷ்வர் குமார் அணியில் இணைந்துள்ளனர்.

இந்திய அணி விவரம்

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர், திலக் வர்மா, நமன் தீர், ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், பிரின்ஸ் யாதவ்.

SCROLL FOR NEXT