டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கவுஸ் 29 ரன்களும் நிதிஷ் 20 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரசல், ராஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.