3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி நியூ சண்டிகரில் இன்று நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்கிறது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி டக் அவுட்டும் ஆகினர்.
ரோகித் சர்மாவுடன் கெய்க்வாட் இணைந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பொறுமையாக ரன்களைச் சேர்த்தது.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 92 ரன்னில் அவுட்டானார். கெய்க்வாட் அரை சதம் கடந்து 57 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து வந்த கே.எல்.ராகுல் முதலில் பொறுமையாக ஆடினார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.
நமன் தீர் 23 பந்தில் 30 ரன்னும், அன்ஷுல் கம்போஜ் 17 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 351 ரன்களைக் குவித்தது. கே.எல்.ராகுல் 129 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், கீமோ பால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 352 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.