கிரிக்கெட்

2வது டி20 போட்டி: சஞ்சு, ஷ்ரேயஸ், திலக் வர்மா அதிரடி: இந்தியா 249 ரன்கள் குவிப்பு

2வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஜோடி 43 பந்தில் 97 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் அய்யர், திலக் வர்மா அதிரடியால் இந்திய அணி 249 ரன்களைக் குவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்று கைப்பற்றியது. அடுத்து நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது டி20 போட்டி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி ஜார்க்கண்டின் ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் இறங்கினர்.

ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 20 ரன்னில் அவுட்டானார்.

சஞ்சு சாம்சன் அரை சதம்

அடுத்து இறங்கிய இஷான் கிஷன் சஞ்சு சாம்சனுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார். சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார்.

2வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஜோடி 43 பந்தில் 97 ரன்கள் குவித்த நிலையில் இஷான் கிஷன் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 41 பந்தில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 82 ரன்கள் குவித்து அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், திலக் வர்மா உடன் இணைந்தார். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்தை வெளுத்து வாங்கியது.

32 பந்தில் 83 ரன் சேர்த்த ஜோடி

இந்த ஜோடி 32 பந்தில் 83 ரன் சேர்த்தது. ஷ்ரேயஸ் அய்யர் 18 பந்தில் 40 ரன்னும், திலக் வர்மா 18 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களைக் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT