கிரிக்கெட்

அமீர் ஜாங்கூ, ரோஸ்டன் சேஸ் அபார ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 626 ரன்கள் குவிப்பு

வெஸ்ட் இண்டீசின் அமீர் ஜாங்கூ இரட்டை சதமடித்து அசத்தினார்.

இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரை 1-0 என இலங்கையும், டி20 தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீசும் வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தனஞ்செய டி சில்வா சதமடித்து 120 ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் சண்டிமால் அரைசதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார். சோனல் தினூஷா 43 ரன்னில் அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், அல்ஜாரி ஜோசப், ஷமார் ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் பிராண்டன் கிங் 31 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்பெல் 39 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய அமீர் ஜாங்கூ, ரோஸ்டன் சேஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிய அமீர் ஜாங்கோ இரட்டை சதமடித்தார். ரோஸ்டன் சேஸ் சதமடித்தார்.

சிறப்பாக ஆடிய அமீர் ஜாங்கோ இரட்டை சதமடித்தார். ரோஸ்டன் சேஸ் சதமடித்தார்.

6வது விக்கெட்டுக்கு 401 ரன்கள் சேர்த்த நிலையில் அமீர் ஜாங்கோ 223 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஸ்டன் சேஸ் 194 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 626 ரன்கள் எடுத்திருந்தது.

இலங்கை சார்பில் மிலன் ரத்னாயகே 5 விக்கெட்டும், அஷிதா பெர்னாண்டோ, சோனல் தினுசா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.