கிரிக்கெட்

சதமடித்த அமீர் ஜாங்கூ: வங்கதேசம் உடனான 2வது டெஸ்ட்-வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் முடிவில் 235/4

அமீர் ஜாங்கூ பொறுப்புடன் ஆடி சதமடித்து 111 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் அமீர் ஜாங்கூவின் அசத்தலான சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை

முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சிலெட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. பிராண்டன் கிங் 9 ரன்னிலும், காவெம் ஹோஜ்ட் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். ஜோஷ்வா டி சில்வா 12 ரன்னில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

4வது விக்கெட்டுக்கு 131 ரன் சேர்த்த ஜோடி

அடுத்து இறங்கிய கெவின் விக்காம், அமீர் ஜாங்கூ ஜோடி பொறுப்புடன் ஆடியது. கெவின் விக்காம் அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 131 ரன்கள் சேர்த்தது.

அமீர் ஜாங்கூ சதம்

பொறுப்புடன் ஆடிய அமீர் ஜாங்கூ சதமடித்து அசத்தினார்.

வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னரே நிறுத்தப்பட்டது.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. அமீர் ஜாங்கூ 111 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வங்கதேசம் அணி சார்பில் தஸ்கின் அகமது, ஹசன் மஸ்முது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT