கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம்-முதல் நாளில் 194/3

பொறுப்புடன் ஆடிய ஹோட்ஜ் அரை சதம் கடந்தார்.

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

நிதான ஆட்டம்

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சந்தர்பால், பிராண்டன் கிங் இறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 13 ஆக இருந்தபோது பிராண்டன் கிங் 12 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய காவெம் ஹோட்ஜ் நிதானமாக ஆடினார். சந்தர்பாலும் ஒத்துழைப்பு கொடுத்தார்.

2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்த நிலையில் சந்தர்பால் 21 ரன்னில் அவுட்டானார். ஹோட்ஜ் உடன் அமீர் ஜாங்கூ இணைந்தார்.

ஹோட்ஜ் அரை சதம்

பொறுப்புடன் ஆடிய ஹோட்ஜ் அரை சதம் கடந்தார்.

3வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில், அமீர் ஜாங்கூ 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஹோட்ஜ் உடன் ஷாய் ஹோப் இணைந்து நிதான ஆட்டத்தை விளையாடி, மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 67 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹொட்ஜ் 83 ரன்னும், ஷாய் ஹோப் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 2 விக்கெட்டும், ஆமீர் ஜமால் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். மழை மற்றும் வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைபட்டது.