கிரிக்கெட்

வங்கதேசம் உடனான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 134/4

ஜான் கேம்ப்பெல் அரை சதம் கடந்து 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. ஹசன் தமிம் 7 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். ஹொசைன் ஷாண்டோ 19 ரன்னில் அவுட்டானார்.

4வது விக்கெட்டுக்கு இணைந்த ஷட்மன் இஸ்லாம்-தவ்ஹித் ஹிருதோய் ஜோடி 88 ரன் சேர்த்தது. தவ்ஹித் ஹிருதோய் 42 ரன் எடுத்திருந்த ரிடயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்னரே நிறுத்தப்பட்டது. முதல் நாள் முடிவில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 74 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. ஷட்மன் இஸ்லாம் 99 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

272 ரன்னுக்கு ஆல் அவுட்

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. ஷட்மன் இஸ்லாம் சதமடித்து 105 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் 34 ரன்னில் வெளியேறினார். காயத்தால் வெளியேறிய ஹிருதோய் 42 ரன்னில் அவுட்டானார். வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 97.4 ஓவரில் 272 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிகன் 5 விக்கெட்டும், ஷமார் ஜோசப், ஜோஷ்வா பிஷப் தலா 2 விக்கெட்டும், ஜேடன் சீல்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். டேக்நரேன் சந்தர்பால் 43 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

SCROLL FOR NEXT