இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் இந்திய சீனியர் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஆனால், டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் 15 ஓவரில் 291 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற குவாலிபையர் 2-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சதம் விளாசினார். ஐபிஎல் நாக்அவுட் சுற்றில் அவரின் சிறந்த ஆட்டம் இதுவாகும்.
இந்த நிலையில் இந்திய டி20 அணிக்காக மீண்டும் விளையாடும் அவரது கனவு குறித்து கூறியதாவது:-
நான் டி20 அணிக்காக விளையாட தேர்வு பெற்றால், விளையாடுவற்காக மிகவும் மகிழ்ச்சியடைவேன். உண்மையிலேயே என்னுடைய ஆட்டத்தில் இன்னும் கவனம் செலுத்த விரும்புகிறேன். டி20 பேட்டராக மேம்பட விரும்புகிறேன். ஆதேபோல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் பேட்டராகவும் மேம்பட விரும்புகிறேன்.
உங்களுக்கு தெரியும், அதாவது கிரிக்கெட் என்பது ஒருபோதும் முழுமையாகத் தேர்ச்சி பெற முடியாத ஒரு விளையாட்டு. ஆனால், நிச்சயமாக அதற்காக நீங்கள் முயற்சி செய்யலாம். அதைத்தான் நான் செய்ய முயற்சிக்கிறேன்.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்தார்.