சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி அசத்தலான உலக சாதனை படைத்துள்ளார். ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 67-ஆவது போட்டியில் 256 ரன்களை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வெங்கடேஷ் அய்யர் மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களை சேர்த்தது.
டி20 கிரிக்கெட்டில் துவக்க வீரராக 50 ரன்களுக்கும் அதிக பார்ட்னர்ஷிப்பை 211 முறை விராட் கோலி கடந்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 50 ரன்களுக்கும் அதிக பார்ட்னர்ஷிப் கொண்ட வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் விராட் கோலி இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ்-ஐ முந்தியுள்ளார். இந்தப் பட்டியலில் டேவிட் வார்னர் (200 முறை) மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் (196 முறை) நான்காவது இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் க்ரிஸ் கெயில் (191 முறை) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 50 ரன்பார்ட்னர்ஷிப் கொண்ட வீரர்கள் பட்டியல்
211 - விராட் கோலி
210 - அலெக்ஸ் ஹேல்ஸ்
200 - டேவிட் வார்னர்
196 - பாபர் அசாம்
191 - க்ரிஸ் கெயில்
இன்றைய போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களுக்கு 255 ரன்களை குவித்தது. ஐதராபாத் தரப்பில் இஷான் கிஷன் அதிகபட்சமாக 79 ரன்களை விளாசினார். இவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா (56) மற்றும் ஹென்ரிட்ச் கிளாசன் (51) அரைசதம் கடந்து அசத்தினர்.