விராட் கோலி 
கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டிக்கிடையே லண்டன் சென்று வர வாடகை விமானம் கேட்டதாக செய்தி: விராட் கோலியின் ரியாக்ஷன்

லண்டன் சென்று வர ஆர்சிபி அணி நிர்வாகத்திடம் வாடகை விமானம் வசதி கேட்டதாக செய்திகள் வெளியான நிலையில், விராட் கோலி அதை மறுத்துள்ளார்

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி லண்டனில் வசித்து வருகிறார். தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மட்டுமே விளையாடி வருவதால் அவருக்கு அதிக நாட்கள் ஓய்வு கிடைக்கிறது.

ஐ.பி.எல். 2026 வருகிற 28-ந்தேதி தொடங்க இருப்பதால், ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி பெங்களூரு வந்துள்ளார். பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் 28-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இதற்கிடையே இரண்டு போட்டிகளுக்கு இடையில் 3 நாள் இடைவெளி இருந்தால், லண்டன் சென்று விடுவேன். போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள்தான் இந்தியா திரும்புவேன். இதற்கு வாடகை விமானம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று ஆர்.சி.பி. அணி நிர்வாகத்திடம் விராட் கோலி கேட்டதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

இது தொடர்பாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிரிப்பது போன்ற எமோஜியை பதிவிட்டு பதில் அளித்துள்ளார்.