கிரிக்கெட்

VIDEO: பந்தை சேதப்படுத்தியால் 5 ரன்கள் பெனால்டி கொடுத்த நடுவர்கள்: PSL தொடரில் பரபரப்பு

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் லாகூர் அணிக்கு எதிரான போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் கராச்சி கிங்ஸ் - லாகூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் லாகூர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தின் போது, லாகூர் வீரர் ஃபகார் சமான் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கராச்சி கிங்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது லாகூர் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப் மற்றும் ஃபகார் சமான் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் ஃபகார் சமான் பந்தின் தன்மையை மாற்ற முயன்றதாக நடுவர்கள் கண்டறிந்தனர்.

நடுவர்கள் பைசல் அப்ரிடி மற்றும் ஷர்புதுல்லா உடனடியாக தலையிட்டு, பந்தை மாற்றினர். ஆட்டத்தின் விதிகளின்படி, லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக விதிக்கப்பட்டது.

இதனால் கராச்சி அணியின் இலக்கு கடைசி ஓவரில் 9 ரன்களாக குறைந்தது. இறுதியில் கராச்சி அணி 3 பந்தில் ஆட்டத்தை முடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.