கிரிக்கெட்

வைபவின் சதம் வீண்.. 229 இலக்கை எட்டி ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத் | IPL 2026

20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் குவித்தது.

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடந்தது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் இறங்கியது

அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ரன்களை குவித்தார். தொடர்ந்து, துருவ் ஜூரெல் 51 ரன்கள், டொவோவன் ஃபெரைரா 33 ரன்கள், ஷிம்ரான் ஹெட்மைர் 11 ரன்கள், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10, ரியான் பராக் 7 ரன்கள், ஜடேஜா 4 ரன்கள், ஜோப்ரா அர்செர் 2 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் குவித்தது.

தொடர்ந்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது.

அவ்வணியில் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். அபிஷேக் சர்மா 51 ரன்களுடன் அரை சதம் கடந்தார். நிதிஷ் குமார் ரெட்டி 36, கிளாசன் 29 ரன்கள் எடுத்தனர்.

18.3 ஓவரில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 229 இலக்கை எட்டியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்துள்ளது.