சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் பீகார் அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான பீகார் அணியில் கேப்டன், துணை கேப்டன் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பீகார் அணியின் கேப்டனாக இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சுராஜ் காஷ்யப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொடரில், பீகார் அணி எலைட் குரூப் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பிரிவில் டெல்லி, அரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ரெயில்வேஸ், தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிரா போன்ற பலம் வாய்ந்த அணிகளும் உள்ளன.
பீகார் அணி தனது முதல் போட்டியில் சவுராஷ்டிரா அணியை வரும் 14-ம் தேதி எதிர்கொள்கிறது.