கிரிக்கெட்

ஒரே போட்டியில் பல சாதனைகள்: வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷி 53 பந்தில் 28 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 204 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிவேக இரட்டை சதம் உள்பட பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ, ஐக்கிய அரபு அமீரகம் ஏ அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த யுஏஇ ஏ அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது.

204 ரன் குவித்த சூர்யவன்ஷி

அடுத்து ஆடிய இந்தியா ஏ அணி, வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால் 14.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வைபவ் சூர்யவன்ஷி 53 பந்தில் 28 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 204 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

ஒரே இன்னிங்சில் 28 சிக்சர்

இந்தப் போட்டியில் 28 சிக்சர் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்தார்.

இதற்குமுன் ஆஸ்திரேலியாவின் டார்சி ஷார்ட் 2018-ம் ஆண்டு வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்காக குயின்ஸ்லாந்துக்கு எதிராக 23 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை வைபவ் தற்போது முறியடித்துள்ளார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தலா 16 சிக்சருடன் முதலிடத்தில் இருந்தனர். தற்போது 28 சிக்சர்கள் அடித்த வைபவ் இருவரையும் முந்தியுள்ளார்.

சதம், இரட்டை சதத்தில் சாதனை

இந்தப் போட்டியில் 28 பந்துகளில் சதமடித்த வைபவ் 52 பந்துகளில் இரட்டை சதத்தையும் எட்டினார். இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் மற்றும் அதிவேக இரட்டை சதம் ஆகிய சாதனைகளையும் படைத்தார்.

SCROLL FOR NEXT