அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணி புதிய பயிற்சியாளர்கள் குழுவுடன் களமிறங்குகிறது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கு புதிய பயிற்சியாளர்கள் குழுவுடன் களம் இறங்குகிறது.
தலைமைப் பயிற்சியாளராக சவுரவ் கங்குலியையும், பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங்கையும் நியமிக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் சமிந்தா வாஸ் நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகியது.
இதேபோல, இந்திய அணியின் முன்னாள் வீரரான அமித் மிஸ்ரா சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இலங்கையின் வெற்றிகரமான வேகப் பந்துவீச்சாளரான சமிந்தா வாஸ் டெஸ்டில் 355 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 400 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
சமிந்தா வாஸ் ஐ.பி.எல். 3 சீசன்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடினார். அவர் 2012 முதல் 2022-ம் ஆண்டு இடைவெளியில் இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார். வேகப்பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்ட அனுபவமும் அவருக்கு உண்டு.
அமித் மிஸ்ரா ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
2008-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஐ.பி.எல். தொடரில் ஆடினார். 3 முறை ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். 162 போட்டியில் விளையாடி 174 விக்கெட் கைப்பற்றியுள்ள அவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் தொழில்முறை கிரிக்கெட் டில் இருந்து ஓய்வுபெற்றார்.