குரூப் `ஏ' பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணிகளும், குரூப் `பி` பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
ஓமனில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஆர்யவீர் சேவாக் 168 பந்துகளில் 160 ரன்கள் விளாசினார். வி.கே. வினீத் 67 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 310 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐக்கிய அரபு அமீரகம் களம் இறங்கியது. அந்த அணியால் 50 ஓவரில் 239 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா குரூப் `ஏ' அணியில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
குரூப் `ஏ' பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணிகளும், குரூப் `பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.