டிராவிஸ் ஹெட்
கிரிக்கெட்

2027 ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளித்த டிராவிஸ் ஹெட்

2025 மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு டிராவிஸ் ஹெட்டை தக்கவைத்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் பட்டாளத்தை கொண்டுள்ளது. தொடக்க ஜோடியான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா அபாரமாக விளையாடி வருகின்றனர். இருவரும் நிலைத்து நின்றுவிட்டால் ரசிகர்கள் சிக்சர் மழையை காணலாம்.

அடுத்த வருடம் சீசனில் இருவரும் இணைந்து விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், டிராவிஸ் ஹெட் அடுத்த வருட ஐபிஎல் சீசன் முழுவதும் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2027 ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்

ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்த வருடம் தொடர்ச்சியாக சர்வதேச போட்டி இருப்பதால் ஒர்க் லோடு (work Load) காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளார். இது தொடர்பாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு தகவல் தெரிவித்து விட்டாராம்.

மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அவரை விடுவிக்க இருக்கிறது. மெகா ஏலத்திற்கு முன்னதாக டிராவிஸ் ஹெட்டை 14 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்திருந்தது. இதனால் டிசம்பர் 16-ந்தேதி கோவாவில் நடைபெற இருக்கும் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் கூடுதலாக 14 கோடி ரூபாய் இருக்கும்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிளாசனை 23 கோடி ரூபாய்க்கும், பேட் கம்மின்ஸை 18 கோடி ரூபாய்க்கும், அபிஷேக் சர்மாவை 14 கோடி ரூபாய்க்கும், நிதிஷ் குமார் ரெட்டியை 6 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2024-ல் 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது

டிராவிட் ஹெட்டை முதன்முறையாக 2024-ல் 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. பின்னர் மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஹெட் 43 போட்டிகளில் 1351 ரன்கள் அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 176.14 ஆகும். சராசரி 32.95 ஆகும்.

SCROLL FOR NEXT