ஆசிய விளையாட்டில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி மீண்டும் தங்கம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த ஆசிய விளையாட்டில் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று இருந்தது.
இந்திய அணி கால் இறுதியில் ஜப்பானை 8 விக்கெட் வித்தியாசத்திலும், அரை இறுதியில் வங்காள தேசத்தை 114 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது. பேட்டிங்கில் ஷபாலி வர்மா, கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர், ஸ்மிருதி மந்தனா ஆகியோரும், பந்துவீச்சில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இலங்கை அணி கால் இறுதியில் மலேசியாவை 86 ரன் வித்தியாசத்திலும், அரை இறுதியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது.
அந்த வகையில் கேப்டன் சமரி அதப்பத்து நல்ல நிலையில் உள்ளார். இறுதிப் போட்டி இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.