கிரிக்கெட்

3-ஆவது டெஸ்ட்: 96 ஆண்டுகால சாதனையை முறியடித்த டாம் லேத்தம் - டெவான் கான்வே ஜோடி...

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 317-0 என்ற நிலையை எட்டியது.

நியூசலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை சேர்ந்த டாம் லேத்தம் மற்றும் டெவான் கான்வே இணைந்து புது சாதனை படைத்து அசத்தியுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

முதல் நாள் ஆட்டம்:

இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 361-4 எனற வலுவான நிலையில் உள்ளது.

ஆட்டத்தின் முதல் நாளில் நியூசிலாந்து கேப்டன் லேத்தம் 151 ரன்களும், டெவான் கான்வே 157 ரன்களும் குவிக்க முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 317-0 என்ற நிலையை உருவாக்கின.

வரலாற்று சாதனை:

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர்களின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆக இது மாறியது.

முன்னதாக 1930-ஆம் ஆண்டு வெலிங்கடனில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் ஸ்டீவி டெம்ஸ்டர் மற்றும் ஜாக்கி மில்ஸ் ஜோடி விக்கெட் இழப்பின்றி 276 ரன்கள் அடித்ததே விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து வீரர்கள் அடித்த அதிகபட்சாக இருந்தது. இதன் மூலம் 96 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து அணி 317 ரன்களை எடுத்த நிலையில், அந்த அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து 319 ரன்களில் 2-ஆவது விக்கெட்டையும் இழக்க முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 361 ரன்களை சேர்த்துள்ளது.