கிரிக்கெட்

திண்டுக்கல் அணிக்கு 198 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி கிராண்ட் சோலாஸ்

இன்றைய போ்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

10-ஆவது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இன்றைய போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 22-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதிரடி தொடக்கம்:

திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராஜ்குமார் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 71 ரன்கள் (9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சுரேஷ் குமார் 41 பந்துகளில் 60 ரன்கள் (7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார்.

அடுத்து களமிறங்கிய சஞ்சய் யாதவ் தன் பங்கிற்கு 20 பந்துகளில் 33 ரன்களை (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். இவருடன் ஆடிய ஜாஃபர் ஜமால் 9 பந்துகளில் 21 ரன்கள் (3 சிக்சர்கள்) எடுத்தார்.

இதன் காரணமாக திருச்சி அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் விஜூ அருள் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வரன் 1 விக்கெட் கைப்பற்றினர்.