கோவை கிங்ஸ் 15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை மளமளவென உயர்ந்தது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
ராதாகிருஷ்ணன்- சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராதாகிருஷ்ணன் 12 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் லோகேஷ்வர் 7 பந்தில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு அந்த்ரே சித்தார்த் உடன் பாலசுப்ரமணியன் சச்சின் ஜோடி சேர்ந்தார். சச்சின் நிதானமாக விளையாட, அந்த்ரே சித்தார்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த்ரே சச்சின் 34 பந்தில் அரைசதம் அடித்தார். சச்சின் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்கள் குவித்தது.
4-வது விக்கெட்டுக்கு அந்த்ரே சித்தார்த் உடன் ஷாரூக்கான் ஜோடி சேர்ந்தார். ஷாரூக் கான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து அம்ப்ரிஸ் களம் இறங்கினார். அந்த்ரே சித்தார்த் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக கோவை கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.