கிரிக்கெட்

துலீப் டிராபி இறுதிப்போட்டி: சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்

துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியுடன், கிழக்கு மண்டல அணி மோதுகிறது.

துலீப் டிராபி இறுதிப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

துலீப் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்றன. இதில் நடப்பு சாம்பியனான மத்திய மண்டல அணியை கிழக்கு மண்டல அணி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதியில் வடக்கு மண்டல அணியை தெற்கு மண்டல அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டி

இதற்கிடையே, துலீப் டிராபியின் இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியுடன், கிழக்கு மண்டல அணி மோதுகிறது.

துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தெற்கு மண்டலம், இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணியுடன் மோதுகிறது.

அனுமதி இலவசம்

இந்நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள துலீப் டிராபி இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாக நேரில் சென்று பார்க்கலாம். போட்டியைக் காண வரும் ரசிகர்களிடம் எந்தவித நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படாது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மைதானத்திற்கு வந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT